Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Wednesday, January 23, 2008

24.01.2008 தமிழ்ச் சங்கத்துக்கு ஸ்பான்சர் பிடித்தது - கவுண்ட்ஸின் பிச்சைக்கார காமெடி

தமிழ்ச்சங்கம் பொதுக்கூட்டத்துக்கு நம்மாலான உதவியைச் செய்வோமேன்னு, நோட்டீஸ் அடிக்கறது, அத தெரிஞ்வங்களுகுக் கொண்டுபோய்க் கொடுக்கிறது,ஸ்பான்ஸர் பிடிக்கிறது கடந்த ஒரு வாரமா இதே வேலைதான்.

இங்கு தமிழரால் புதிதாக ஆரம்பிக்கபட்ட உணவகத்தில் சங்க நிர்வாகியை அழைத்துக்கொண்டு அவர்களால் ஏதாவது ஸ்பான்சர் செய்ய முடியுமா என்று கேட்கப்போனேன். கடை நிர்வாகியை, சங்க நிர்வாகிக்கு அறிமுகப்படுத்தும்போது,அவர் தாந்தான் இந்தக்கடைக்கு முழுபோறுப்பு என்றார்.

அது புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் விளம்பரத்துக்காக அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று நம்பினோம். பொதுக்கூட்டத்துக்கு 100 பேருக்குக் குறையாமல் வருவார்களெனெ எதிர்பார்ப்பதால் அவர்களுக்கு இனிப்பு,காரம்,டீ/காபி வேண்டும் என்றோம். கடை நிர்வாகியும் மிக மகிழ்ச்சியுடன் சரி என்றார். அப்போது இரவு மணி 11. நாங்களும் ரொம்ப சந்தோஷமா வீட்டுக்கு வந்துட்டோம்.

மறுநாள் காலையில் அந்தக்கடை நிர்வாகி செல்பேசியில் அழைத்து, அவ்வாறு முழுவதுமாக இலவசமாக கொடுப்பது கட்டுபடியாகாதென்றும், வேண்டுமானால் 50 சதவீத விலைக்குறைப்பு செய்துகொள்வதாகவும் தெரிவித்தார். அவர், தாம் கடை முதலாளியுடன் இது பற்றி பேசியதாகவும், அவர் முழுதுவதுமாக இலவசமாகக் கொடுப்பதற்கு ஒப்பவில்லை என்றும் சொன்னார். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை.

சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் எல்லோரிடமும் இதற்க்கெல்லாம் சந்தாவாக ஆளுக்கு இவ்வளவு என்று பணம் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.பொதுகூட்டத்துக்கு நம்மாட்கள் வர்ரதே பெரிசு. பிறகு எங்கே அவர்களிடம் பணம் கேட்க.

நாங்கள் சொன்ன பொருட்களுக்கு செலவு ரூ.1500க்கு மேல் ஆகாது. அந்த உணவகத்துக்கு அவர்கள் ரூ.15 லட்சத்துக்குமேல் செலவு செய்திருப்பதாக அறிகிரேன். அவ்வுணகத்தில் ஒரு அப்பளம் ரூ.7 என்றால் எவ்வளவு விலை உயர்ந்த உணவகம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அவர்கள் கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் விருப்பம்.

1.ஆனால், முதல் நாள் இராவு சரி என்று சம்மதிது விட்டு மறு நாள் ஏன் மறுக்க வேண்டும்? அவ்வாறு தன்னால் முடிவு எடுக்க முடியவில்லை எனில்,ஏன் உடனே சரியென சொல்ல வேண்டும்? கடை முதலாளியிடம் தான் கேட்டு சொல்வதாகச் சொல்லியிருக்க வேண்டியதுதானே. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கடை முதலாளியும் அங்கு வந்தார். அவரிடம் கடை நிர்வாகியும் நாங்கள் எதற்க்காக வந்துள்ளோம் என்பதைத் தெரிவித்தார்.

2.தன்னால், ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாதபோது அவர் எதுக்காக தாந்தான் அந்தக்கடைக்கு முழுப்பொறுப்பு என்று சொல்ல வேண்டும்? அதன் பின் வேரொரு கடையில் நான் இதேமாதிரி ஸ்பான்சர்சிப் கேட்டபோது, அவர் தான் தன் தங்கமணியுடன் பேசிவிட்டு சொல்வதாகத் தெரிவித்தார். அதேமாதிரி தான் யோசிச்சு சொல்வதாக சொல்ல வேண்டியது தானே.

இதைப்பர்க்கும்போது ஒரு படத்தில் கவுண்டமணியின் ஒரு காமெடிதான் ஞாபகம் வருது. கவுண்டமணி பிச்சைக்காரனாய் ஒரு வீட்டில் பிச்சை கேட்பார். வீட்டுக்காரர் தன்னிடம் பிச்சை போடுவதற்க்கு ஒன்றும் இல்லை என்பார். உடனே,அவரிடம் கவுண்ட்ஸ் அப்படி எனில் அவரையும் தன்னுடன் பிச்சைக்கு வரசொல்வார். ஏனெனில்,வீட்டுக்காரரிடமும் ஒன்றும் இல்லை,தன்னிடமும் ஒன்றும் இல்லை என்பார்.

மேற்சொன்ன விடயம் அவ்ளோ பெரிய விடயமா? உங்களுக்கு ஒரு மேலதிக க்ளு. உணவகத்தில், கடை நிர்வாகியும்,கடை முதலாளியும் ரொம்ம ரொம்ப நெருங்கிய சொந்தம். அவங்களுக்குள்ள என்ன உறவுன்னு சரியா யூகிக்கிரவுங்களுக்கு இனிப்பு,காரம் பரிசு. அது உங்க செலவுல பார்சல் அனுப்பபடும்.