Thursday, January 31, 2008

01.02.2008 புகார் பெட்டி - நுகர்வோர் குறை தீர்வு - 1

நாம என்ன பொருள்/சேவையை வாங்கினாலும் அதிலுள்ள குறையச் சம்மத்தப்பட்டவர்களிடம் சொல்லி நிவர்த்தி செய்ய முடிவதில்லை. அரசு சேவை மட்டுமல்ல தனியார் சேவையும் அதே லட்சணத்தில்தான் இருக்கு.
"என்னத்த சொல்லி என்ன பண்ண? நாம சொல்லி நடக்கவா போகுது?"ன்னு நம்ம எல்லோருக்கும் ஒரே அங்கலாய்ப்புதான். சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தால் புகாரே வரவில்லை" என்று வழக்கமான பதில் கிடைக்கும். என்னமோ புகார் வந்தால் அதை தீர்த்துவிட்டுத்தான் மறுவேலைபார்ப்பது மாதிரி.

சமீபத்தில் படித்த செய்தி. வங்கி சம்பந்தமான 'வங்கி மத்தியஸ்த தீர்ப்பாயத்துக்கு' வந்த புகார்களில் ஆயிரம் உபயோகிப்பாளர்க்கு 0.01க்கும் குறைவாம். அதாவது, லட்சத்தில் ஒருவர்தான் புகாரே பண்ராராம். ஒரே ஒரு மேல்நாட்டு வங்கியில் மட்டும் 1000க்கு 25 பேராம். ஏனெனில்,புகார் செய்தவர்கள் அதிக அளவில் பணப்பரிவர்த்தனை செய்யும் HNI(High Networth Individuals)க்கள்.

சமீபத்தில் ரயிலில் வந்தபோது உடன் வந்தவர் ஒன்று சொன்னார். அவர் ரயில் ஒரு நிலையத்தில் நின்றபோது, கட்டணக் கழிப்பிடத்திற்க்குச் சென்றிருக்கிரார். அங்கிருப்பவர் கட்டணமாக ரூ.2 கேட்டிருக்கிறார். உடனே நம்மாள் திரும்பி வந்துட்டார். இதே மாதிரி, எனக்கு பெங்களூரில் நடந்தபோது அங்குள்ள புகார் புத்தகத்தில் புகாராக இதை எழுதிவிட்டு வந்தேன். ரயில்வேயிலிருந்து புகார் கிடைக்க்ப்பெற்ற அத்தாட்சிக் கடிதம் எனக்குச் சில தினங்களில் கிடைத்தது. அதற்க்கப்புரம், அதே மாதிரி ரயிலில் போகும் சந்தர்ப்பமோ, அங்கு கழிப்பிடத்தை உபயோகப்படுத்தும் வாய்போ அமையவில்லை.

பல வருடங்களுக்கு முன் (தமிழ்நாட்டு) ஒரு கோவிலில் செருப்பை அதற்க்கான பாதுகாப்பகத்தில் விட்டேன். அங்கிருப்பவர் அதற்க்குக் கட்டணமாக 50 பைசா கேட்டார். அப்போதெல்லாம் அதற்க்கு 25 பைசா தான். நான் தயங்கியவாரே 50 பைசாவை அவரிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். அப்போது கண்ணில் பட்டது அந்த அறிவிப்புப் பலகை "செருப்புக்குக் கட்டணம் 25 பைசா". உடனே, செருப்புக்காப்பாளரிடம் அதைக்காட்டி "ஏன் அதிகம் வாங்குகிறீர்கள்" என்று கேட்டேன். அவர் "நிரம்பப் பணம் போட்டு குத்தகை எடுத்துள்ளோம். அதனால் 50 பைசாதான் " என்றார். இருந்தாலும் மனசு கேக்கலை. அங்குள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில் இது சம்பந்தமாக விசாரிக்கச் சென்றேன். இதற்க்காவே காத்திருந்தவர்போல, அங்குள்ள அதிகாரி "ஆமாம் சார் 25 பைசாதான். ஆனால், குத்தகைதாரர் அதிகமாத்தான் வசூலிக்கிறார். அதனாலதான் நாங்களே(அறநிலையத் துறை) அதை எடுத்து நடத்தலாம்னு இருக்கோம். அதுக்கு குறைந்தது 20 (எழுத்துப்பூர்வமான) புகார்கள் தேவை. அந்தப் புகார்களை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, நாங்களே அதை நடத்துவதற்க்கு அனுமதி பெறணும். இதுவரை 10 புகார்கள் வந்துள்ளன. நீங்களும் எழுத்துப்பூர்வமாகப் புகார் கொடுத்தால் பெற்றுக்கொள்வோம்" என்றார். பின் அவ்வாறே செய்தேன். நான் அவ்வூரிலோ, அருகிலோ குடியிருந்து இருந்தால், மீதி 10 புகார் கடிதங்களையும் மற்றவர்களிடமிருந்து நானே பெற்றிருப்பேன்!

டோண்டு அவர்கள் தன் பதிவில் தான் மும்பையிலிருக்கும்போது தவறாகக் காட்டிய போக்குவரத்து சிக்னலை, புகாராகத் தெரிவித்ததாகவும், மறுநாளே அது சரி செய்யப்பட்டதாகவும் சொல்லியிருந்தார்.

சரி சரி,முன்னுரை போதும்,விஷயத்துக்கு வா என்கிறீர்களா. இதோ வந்துட்டேன்.

இதுவரை 5 விடயங்களில் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம், ரிசர்வ் வங்கியின் மத்தியஸ்த தீர்ப்பாயம் போன்றவற்றில் புகார் செய்து, இறையருளால், அக்குறைகள் நிவர்த்தியாகியுள்ளன. ஒரு முறை கடைக்காரரிடம் சுமார் 15 நிமிடம் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் பற்றி பேசியே, குறைகள் நிவர்த்தியாயுள்ளன. அதில் ஒவ்வொன்றாகப் பார்போம்.

Wednesday, January 23, 2008

24.01.2008 தமிழ்ச் சங்கத்துக்கு ஸ்பான்சர் பிடித்தது - கவுண்ட்ஸின் பிச்சைக்கார காமெடி

தமிழ்ச்சங்கம் பொதுக்கூட்டத்துக்கு நம்மாலான உதவியைச் செய்வோமேன்னு, நோட்டீஸ் அடிக்கறது, அத தெரிஞ்வங்களுகுக் கொண்டுபோய்க் கொடுக்கிறது,ஸ்பான்ஸர் பிடிக்கிறது கடந்த ஒரு வாரமா இதே வேலைதான்.

இங்கு தமிழரால் புதிதாக ஆரம்பிக்கபட்ட உணவகத்தில் சங்க நிர்வாகியை அழைத்துக்கொண்டு அவர்களால் ஏதாவது ஸ்பான்சர் செய்ய முடியுமா என்று கேட்கப்போனேன். கடை நிர்வாகியை, சங்க நிர்வாகிக்கு அறிமுகப்படுத்தும்போது,அவர் தாந்தான் இந்தக்கடைக்கு முழுபோறுப்பு என்றார்.

அது புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் விளம்பரத்துக்காக அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று நம்பினோம். பொதுக்கூட்டத்துக்கு 100 பேருக்குக் குறையாமல் வருவார்களெனெ எதிர்பார்ப்பதால் அவர்களுக்கு இனிப்பு,காரம்,டீ/காபி வேண்டும் என்றோம். கடை நிர்வாகியும் மிக மகிழ்ச்சியுடன் சரி என்றார். அப்போது இரவு மணி 11. நாங்களும் ரொம்ப சந்தோஷமா வீட்டுக்கு வந்துட்டோம்.

மறுநாள் காலையில் அந்தக்கடை நிர்வாகி செல்பேசியில் அழைத்து, அவ்வாறு முழுவதுமாக இலவசமாக கொடுப்பது கட்டுபடியாகாதென்றும், வேண்டுமானால் 50 சதவீத விலைக்குறைப்பு செய்துகொள்வதாகவும் தெரிவித்தார். அவர், தாம் கடை முதலாளியுடன் இது பற்றி பேசியதாகவும், அவர் முழுதுவதுமாக இலவசமாகக் கொடுப்பதற்கு ஒப்பவில்லை என்றும் சொன்னார். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை.

சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் எல்லோரிடமும் இதற்க்கெல்லாம் சந்தாவாக ஆளுக்கு இவ்வளவு என்று பணம் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.பொதுகூட்டத்துக்கு நம்மாட்கள் வர்ரதே பெரிசு. பிறகு எங்கே அவர்களிடம் பணம் கேட்க.

நாங்கள் சொன்ன பொருட்களுக்கு செலவு ரூ.1500க்கு மேல் ஆகாது. அந்த உணவகத்துக்கு அவர்கள் ரூ.15 லட்சத்துக்குமேல் செலவு செய்திருப்பதாக அறிகிரேன். அவ்வுணகத்தில் ஒரு அப்பளம் ரூ.7 என்றால் எவ்வளவு விலை உயர்ந்த உணவகம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அவர்கள் கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் விருப்பம்.

1.ஆனால், முதல் நாள் இராவு சரி என்று சம்மதிது விட்டு மறு நாள் ஏன் மறுக்க வேண்டும்? அவ்வாறு தன்னால் முடிவு எடுக்க முடியவில்லை எனில்,ஏன் உடனே சரியென சொல்ல வேண்டும்? கடை முதலாளியிடம் தான் கேட்டு சொல்வதாகச் சொல்லியிருக்க வேண்டியதுதானே. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கடை முதலாளியும் அங்கு வந்தார். அவரிடம் கடை நிர்வாகியும் நாங்கள் எதற்க்காக வந்துள்ளோம் என்பதைத் தெரிவித்தார்.

2.தன்னால், ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாதபோது அவர் எதுக்காக தாந்தான் அந்தக்கடைக்கு முழுப்பொறுப்பு என்று சொல்ல வேண்டும்? அதன் பின் வேரொரு கடையில் நான் இதேமாதிரி ஸ்பான்சர்சிப் கேட்டபோது, அவர் தான் தன் தங்கமணியுடன் பேசிவிட்டு சொல்வதாகத் தெரிவித்தார். அதேமாதிரி தான் யோசிச்சு சொல்வதாக சொல்ல வேண்டியது தானே.

இதைப்பர்க்கும்போது ஒரு படத்தில் கவுண்டமணியின் ஒரு காமெடிதான் ஞாபகம் வருது. கவுண்டமணி பிச்சைக்காரனாய் ஒரு வீட்டில் பிச்சை கேட்பார். வீட்டுக்காரர் தன்னிடம் பிச்சை போடுவதற்க்கு ஒன்றும் இல்லை என்பார். உடனே,அவரிடம் கவுண்ட்ஸ் அப்படி எனில் அவரையும் தன்னுடன் பிச்சைக்கு வரசொல்வார். ஏனெனில்,வீட்டுக்காரரிடமும் ஒன்றும் இல்லை,தன்னிடமும் ஒன்றும் இல்லை என்பார்.

மேற்சொன்ன விடயம் அவ்ளோ பெரிய விடயமா? உங்களுக்கு ஒரு மேலதிக க்ளு. உணவகத்தில், கடை நிர்வாகியும்,கடை முதலாளியும் ரொம்ம ரொம்ப நெருங்கிய சொந்தம். அவங்களுக்குள்ள என்ன உறவுன்னு சரியா யூகிக்கிரவுங்களுக்கு இனிப்பு,காரம் பரிசு. அது உங்க செலவுல பார்சல் அனுப்பபடும்.

Tuesday, January 22, 2008

21.01.2008 கணவர்களுக்கு தனி இலாகா வேண்டும்:ஆண்கள் சாலை மறியல்

தகவல் : தினமலர்

பெங்களூர் : மகளிர் மேபாட்டுக்கு தனித் துறை இருப்பது போன்று கணவர்களின் நலனுக்காகவும் தனியாக "ஆண்கள் மேம்பாட்டுத்துறை" ஏற்ப்படுத்த வேண்டும் எனக்கோரி கணவர் சங்கம் சார்பில் பென்களூரில் ஆண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.குடும்பத்தில் ஏற்ப்படும் சிறு சம்பவங்களுக்கு,தங்களை கொடுமைப்படுத்தியதாகக் கூறி, பெண்கள் வீதிக்கு வந்தால் அவர்களுக்கு உதவுவது போல,தமக்கும் துணை புரிய அரசு தனித்துறை ஏற்ப்படுத்த வெண்டுமென "சேவ் இண்டியன் ஃபேமிலி அசோசியேசன்" என்ற சங்கம் சார்பில் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் காந்தி சிலை முன் அமர்ந்து சங்கப்பிரதிநிதிகள் தர்ணா நடத்தினர்.
நம்ம கமெண்ட் : பெண்ணீய வாதிகள் இப்பவாவது புரிஞ்சுக்கலாம் பெண்களுக்கு ஏற்க்கனவே உரிமை/சுதந்திரம் வந்திருச்சுன்னு.

20.01.2008 தமிழ்ச்சங்க பொதுக்கூட்ட அழைப்பு

"அடலேறுகளே,அலை கடலென திரண்டு வாரீர்"னு எழுத ஆசைதான். அது கொஞ்சம் ஓவரா தெரியறதனால, இப்படி தலைப்பு.
ஒளவைத் தமிழ்ச் சங்கம்
நொய்டா
அழைப்பு
நாள் : 27 சனவரி 2008
நேரம் : பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை
பதிவுக்கு இறுதி நாள் : 22 சனவரி 2008
தங்கள் வருகையைத் தவறாமல் பதிவு செய்து கொள்ளுங்கள் . இது உங்கள் வசதிக்கு.
தொடர்புக்கு:
திரு. சங்கரன் செல்பேசி : 9312026084
திரு. சுவாமிநாதன் செல்பேசி : 9811918315
திரு. கிருஷ்ணமாச்சாரி செல்பேசி : 9818092191
மின்னஞ்சல் :
ப்ளாக்: