Thursday, February 21, 2008

21.02.2008 தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வரி சலுகைகள்

தகவல் : 21.02.2008 எக்கனாமிக் டைம்ஸில்
ராசா, மத்திய அமைச்சர், தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்த்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் பிரதம மந்திரியும் இதை ஏற்றுள்ளார். எதிர்வரும் பட்ஜெட்டில் இத்துறைக்கு தேவையான அறிவிப்புக்களை வெளியிடுவார் என்று எதிர்பார்கிரோம்.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கான முக்கிய சலுகையான எஸ் டி பி ஐ யின் வரிச்சலுகை 2008 - 2009 நிதியாண்டுடன் முடிவடைகிறது.

அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கும் ஒரு துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை விளங்குவதோடு மட்டுமல்லாமல் அதனோட வளர்ச்சியும் 33% ஆகும் என்பதை நிதியமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும்.


தகவல் தொழில்நுட்பத்துறை வேலை வாய்ப்பு அளிப்பதில் வருடத்திற்க்கு 26% வளர்ந்துள்ளது. எற்றுமதி வளர்ச்சியிலும் இத்துறை பெரும்பங்கு வகிக்கிறது. இவ்வருடம் இத்துறையில் மொத்த ஏற்றுமதி 40 பில்லியன் டாலராக உள்ளது. அது 2010ஆம் வருதத்தில் 60 பில்லியன் டாலராக ஆகும். மேலும், மொத்த உள்நாட்டு உற்ப்பத்தியில், தகவல் தொழில்நுட்பத்துறையின் பங்கு 1998ல் 1.2% சத வீதமாக இருந்த வளர்ச்சி, 2008 நிதியாண்டில் 5.3% என்று அதிக அளவில் உயர்ந்துள்ளது. ஆனால், ரூபாயின் நாணய மதிப்புயர்வால் கடந்த ஒரு வருடமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

2 comments:

Tech Shankar said...

அப்படின்னா ஐடி டிபார்ட்மன்டால ஐடி டிபார்ட்மன்டுக்கு நல்ல லாபம்னு சொல்லுங்க.

முதல் ஐடி (இன்பர்மேசன் டெக்னாலஜி)
இரண்டாம் ஐடி (இன்கம்டேக்ஸ் டிபார்ட்மன்டு)

ஆகா உங்கள் வெட்டி அரட்டை ப்லாக்குல இப்படி வெட்டியரட்டை அடிக்க 6ஆல முடியும்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
தமிழ்நெஞ்சம் said...
முதல் ஐடி (இன்பர்மேசன் டெக்னாலஜி)
இரண்டாம் ஐடி (இன்கம்டேக்ஸ் டிபார்ட்மன்டு)
==>
அட, இந்த எதுகை மோனை கூட நல்ல இருக்கே.