வக்கீல் ஒருவர் ஐசிஐசிஐ வங்கிக்கு கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் செய்யும் வக்கீல் தொழிலைக் காரணம் காட்டி வங்கி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. அவர் டில்லி மாநில நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதற்க்கு அவ்வங்கிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த கோர்ட்.
நம்ம கமெண்ட் : கிரெடி கார்ட் நிராகரிப்புக்குள்ள சரியான காரணத்தை சாதாரணமாக வங்கிகள் சொல்லாது. அக்காரணத்தை அந்த வக்கீல் எப்படி அவ்வங்கியிலிருந்து பெற்றார் என்று தெரியவில்லை. என்னுடன் வேலை பார்ப்பவர் அவ்வாறு காரணம் கேட்டபோது, அவ்வங்கி மறுத்து விட்டதாம். அதற்க்கு ரிசர்வ் வங்கியின் மத்தியஸ்த தீர்ப்பாயத்தை அணுகும்படி அவரிடம் சொல்லியிருக்கேன்.
சாதாரணமா இந்த மாதிரி விஷயங்களுக்கு இவ்வளவு அதிக அபராதம்(ரூ.10 லட்சம்) விதிக்க முடியுமான்னு தெரியவில்லை. வங்கி மேல் முறையீடு செய்தால், அபராதத்தை மிகவும் குறைத்து விடுவார்கள்.
2 comments:
தலைப்ப பாத்துட்டு
எங்கயோ படிச்ச நியூஸ் மாதிரி இருக்கேன்னு பாத்தேன்.
தினமலர்னு போட்டுருக்கீங்க!.
ம். க்ரெடிட் கார்ட் குடுக்கறதும் குடுக்காததும் அவங்க முழு உரிமைன்னு ஸ்டார் போட்டு படிக்க முடியாத அளவுல பார்ம்ல ஒரு லைன் இருந்திருக்குமே
அப்புறம் எப்பிடி கோர்ட் பைன் போட்டுச்சோ!!
<==
மங்களூர் சிவா said
ம். க்ரெடிட் கார்ட் குடுக்கறதும் குடுக்காததும் அவங்க முழு உரிமைன்னு ஸ்டார் போட்டு படிக்க முடியாத அளவுல பார்ம்ல ஒரு லைன் இருந்திருக்குமே
அப்புறம் எப்பிடி கோர்ட் பைன் போட்டுச்சோ!!
==>
பொதுச்சேவை எதையுமே அப்படிச் சொல்ல முடியாது. தகுந்த காரணம் சொல்லியே ஆகணும். அதுக்குத்தான தகவல் உரிமைச் சட்டம்லாம் கொணர்திருக்காங்க.
காரணமில்லாம ரூ.10 லட்சம் அபராதத்துக்கெல்லாம் சட்டத்தில இடமில்லைன்னு நினைக்கிரேன்.
கொஞ்ச நாள் முன்னாடி இதே வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம் போட்டாங்க.அப்புரம், மேல் கோர்டில் அப்பீலில் அத நீக்கிட்டாங்க.
Post a Comment