டிசிஎஸ்,ஐபிஎம்-க்கு அடுத்து இப்போது பிர்லாசஃப்ட்டோட(Birlasoft) முறை. அவங்க 100 மென்பொருளாளர்களை வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்களாம். "நாங்க ஆட்குறைப்பு ஒண்ணும் செய்யலை. அவங்களோட வேலையில முன்னேற்றமின்மை(performance) காரணாமத்தான் அனுப்புனோம்"னு அவங்க சொல்ராங்க. "அதுவும், இந்த வருடம் மட்டும் முதல் தடவையா அவங்களோட முன்னேற்றமின்மை காரணமா இருந்தால்கூட அவங்கள வீட்டுக்குப் போகச் சொல்லலே. இதுக்கு முன்பும் வேலையில் அவங்களோட முன்னேற்றம் சரியா இல்லாததனாலதான் அவங்கள அனுப்புனோம். இந்த தடவ உள்ள அப்ரைசல்ல(Appraisal) உள்ளவங்களில் 5 சதவீதம் பேர் இப்படி பாதிக்கப்பட்டு இருப்பாங்க"ன்னு, பிர்லாசாஃப்ட் பேச்சாளர் சொன்னார்.
அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குறைவும்,அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் பதிப்புக்கூடுதலும் , இதற்க்குக் காரண்னு வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
கார்ட்னெரோட வல்லுனர் சொல்வது : 2:1 என்றிருந்த வேலைக்கு ஆளெடுப்பு விகிதம் 15:1 என்று கூடுனதும் இதற்க்குக் காரணம். அந்த அளவுக்கு இந்தியாவுல மென்பொருள் வேலைக்கு ஆட்கள் தயாராய் இருக்காங்க.
நம்ம கமெண்ட் : இந்த மாதிரி காரணம் இந்த மாதிரி சிரமமான சமயங்களில் மட்டும் அவங்களுக்குத் தோணுது. அப்போ இவ்ளோ நாளா நல்லா வேலை செய்யாதவனுக்கு சும்மா சம்பளம் கொடுத்திட்டு இருந்திருக்கேன்னு சொல்ராங்களா?
3 comments:
ப்ச்
:(
வருத்தமான விசயம்தான்.
அமெரிக்க டாலரின் வீழ்ச்சி இன்னும் என்ன என்னவெல்லாம் பண்ணப் போகிறதோ..
//இந்த மாதிரி காரணம் இந்த மாதிரி சிரமமான சமயங்களில் மட்டும் அவங்களுக்குத் தோணுது.அப்போ இவ்ளோ நாளா நல்லா வேலை செய்யாதவனுக்கு சும்மா சம்பளம் கொடுத்திட்டு இருந்திருக்கேன்னு சொல்ராங்களா?//
அதானே?
வாங்க பாசமலர்.
Post a Comment