Thursday, February 21, 2008

21.02.2008 தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வரி சலுகைகள்

தகவல் : 21.02.2008 எக்கனாமிக் டைம்ஸில்
ராசா, மத்திய அமைச்சர், தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்த்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் பிரதம மந்திரியும் இதை ஏற்றுள்ளார். எதிர்வரும் பட்ஜெட்டில் இத்துறைக்கு தேவையான அறிவிப்புக்களை வெளியிடுவார் என்று எதிர்பார்கிரோம்.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கான முக்கிய சலுகையான எஸ் டி பி ஐ யின் வரிச்சலுகை 2008 - 2009 நிதியாண்டுடன் முடிவடைகிறது.

அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கும் ஒரு துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை விளங்குவதோடு மட்டுமல்லாமல் அதனோட வளர்ச்சியும் 33% ஆகும் என்பதை நிதியமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும்.


தகவல் தொழில்நுட்பத்துறை வேலை வாய்ப்பு அளிப்பதில் வருடத்திற்க்கு 26% வளர்ந்துள்ளது. எற்றுமதி வளர்ச்சியிலும் இத்துறை பெரும்பங்கு வகிக்கிறது. இவ்வருடம் இத்துறையில் மொத்த ஏற்றுமதி 40 பில்லியன் டாலராக உள்ளது. அது 2010ஆம் வருதத்தில் 60 பில்லியன் டாலராக ஆகும். மேலும், மொத்த உள்நாட்டு உற்ப்பத்தியில், தகவல் தொழில்நுட்பத்துறையின் பங்கு 1998ல் 1.2% சத வீதமாக இருந்த வளர்ச்சி, 2008 நிதியாண்டில் 5.3% என்று அதிக அளவில் உயர்ந்துள்ளது. ஆனால், ரூபாயின் நாணய மதிப்புயர்வால் கடந்த ஒரு வருடமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

Monday, February 11, 2008

11.02.2008 புகார் பெட்டி - நுகர்வோர் குறை தீர்வு - 2

முத முதல்ல நுகர்வோர் குறை தீர்க்கும் அமைப்பை அணுகிய அனுபவமாதலால் சுய புராணம் கொஞ்சம் நீளமா இருக்கும். பொறுதருள்க.

1998ல் நான் வெளிநாடு போக வேண்டியிருந்தது. கம்பித் தொலைபேசி(landline) இணைப்பைத் தொலைத் தொடர்புத் துறையிடம் (அப்போது அது BSNL ஆக மாறியிருந்ததா என்று நினைவில்லை) சொல்லி துண்டிக்கச் சொல்ல வேண்டும், மாதா மாதம் தொலைபேசிக்கான வாடக்கைக் கட்டணம், திரும்ப வரும்வரை கட்ட வேண்டாமென்றால். நல்ல வேளையாக வீட்டுச் சொந்தக்காரர், தொலைபேசி இணைப்பை அப்படியே விட்டுவிட்டுச் செல்லும்படியும், தான் அதை உபயோகப்படுத்தி விட்டு, தானே அதற்க்கான கட்டணத்தை தொலைதொடர்பு துறையிடம் அவ்வப்போது கட்டி விடுவதாகச் சொன்னார். இதுவும் நல்லதாகப் பட்டபடியால், அப்படியே செய்தேன். வேலையை முடித்துக்கொண்டு திரும்பியவுடன் தான் தெரிந்தது. வீட்டுச்சொந்தக்காரர் கடைசி 4,5 மாதங்களுக்கு தொலைபேசி கட்டணத்தைக் கட்டாததால் இணைப்பு ஏற்க்கனவே துண்டிக்கப்பட்டு விட்டது என்று. பின், தொலைத் தொடர்புத் துறைக்குச் சென்று கட்ட வேண்டிய நிலுவைத் தொகைகளையெல்லாம் கட்டிவிட்டு மறுபடி இணைப்பு கிடைக்கக் காத்திருந்தேன். 2 மாதங்கள் ஆயிற்று. இணைப்பு மறுபடியும் கிடைத்தபாடில்லை. அதைப் பற்றிய எந்தக் கடிதமும் அவர்களிடமிருந்து கிடைத்த பாடில்லை.

தொலைத்தொடர்புத் துறைக்குச் நேரடியாகச் சென்றேன். அக்கௌண்ட்ஸ் துறைக்குச் சென்றால், கமர்ஷியல் துறைக்கும், அங்கு சென்றால் அக்கௌண்ட்ஸ் துறைக்கும், மாற்றி மாற்றி அலைக்கழித்தார்கள். இப்படியே நாலைந்து மாதங்கள் ஆய்விட்டன. 5,6 முறை அங்கு போன பின் புரிந்தது, நான் நிலுவைத்தொகையைக் கட்டியபின், அந்த விபரங்கள் கணிணியில்(database) அவர்களால் பதியப்படவில்லை என்று. கடைசியாக அவர்கள் அதையும் செய்த பின், இணைப்பு மீண்டும் கிடைத்தது. இப்போது சுமார் 1 வருடம் ஓடிவிட்டது.

மனசுக்கு மிகக் கஷ்டமாக இருந்தது. இவ்வளவு தடவை அலைந்தது, இணைப்புக் கிடைக்காமல் போனது, இணைப்பு இல்லா சமயங்களிலும் அதற்க்கான கட்டணத்தைக் கட்டியது எல்லாம்.

செய்தித்தாளில் அவ்வப்போது நுகர்வோர் குறைம் தீர்க்கும் அமைப்பைப் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு வழியாக அதன் முகவரியைக் கண்டுபிடித்து, நடந்ததை தெளிவாக, புகாராக, எழுதி அனுப்பியவுடன், புகார் கிடைத்ததற்க்கான கடிதமும், அவ்வழக்கு இன்ன தேதியில் விசாரணக்கு வருமென்றும், அதற்க்கு நேரில் வரவேண்டுமென்ற விவரங்களும் அதில் இருந்தன.

சொன்ன தேதியில் அங்கு சென்றேன். நான் அப்போதுதான் மூச்சிரைக்க (7 மாடி என்று நினைவு) மாடி ஏறி, வழக்கு நடக்கும் அறை வாசலில் நின்றேன். அப்போதுதான் என் பெயர் அழைக்கப்பட்ட்டது. என் பெயரை சொல்லி , என்னுடைய வழக்கா என்று கேட்பதற்க்காக என் கையைத் தூக்கினேன். என் பெயரை அழைத்தவர் "நீங்கள்தான் ....."என்று கேட்க , நான் ஆமென சொல்லி உள்ளே நுழைந்தேன்.

இது வரை படங்களில் மட்டுமே பார்த்த கோர்ட்டு இருந்தது. சுமார் 1அடி உயர மேடை. அதில் பெரிய மேசை. அதன் பின் 3 நீதிபதிகள், அதில் 2 ஆண்கள், 1 பெண் உக்கார்ந்து இருந்தனர். ஆனால், சினிமாவில் வரும் கோர்ட்டில் உள்ளதுபோல் நீதிபதியெல்லாம் கறுப்பு கோட்டு எல்லாம் அணிந்திருக்கவில்லை. சாதாரண சிவிலியன் உடையில்தான் இருந்தனர். வக்கீல் யாரும் இருந்ததாக நினைவில்லை. மற்ற வழக்காடிகள் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். குற்றவாளி கூண்டு எல்லாம் இருக்கவில்லை. அந்த அறை, பள்ளி/கல்லூரி வகுப்பறை மாதிரி இருந்தது. அதன்பின் அந்தப்பெண் நீதிபதி , என்ன விஷயம்(புகார்) என்றார். என் புகாரில் சொல்லியிருந்ததைச் சொல்லி, இந்த மாதிரி, தொலைத்தொடர்புத் துறையின் கவனக் குறைவால், எனக்குக் காலதாமதம் ஏற்ப்பட்டதையும், அபராதக்கட்டணம் கட்ட வேண்டியதையும் சொன்னென். அவர்கள் மூவரும் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டனர். பின், அப்பெண் நீதிபதியிடம், நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். அவர் "நீங்கள் போகலாம். நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்றார். சில மாதங்களில் நான் கட்டிய அதிகப்படியான தொகைக்கு ஈடான கிரெடிட் கடிதம் தொலைத் தொடர்புத் துறையிலிருந்து வந்ததது. பின் வரும் மாதங்களில் அப்பணம் அந்தந்த மாத கட்டணங்களில் சரி செய்யப்படும் என்று.

பின் நான் மறுபடியும் குறை தீர்வு மன்றத்திற்க்கு கடிதம் எழுதினேன், எனக்கு நட்ட ஈடு வேண்டுமென. அக்கடிதத்திற்க்கு, தொலைத் தொடர்புத் துறையிலிருந்து கடிதம் வந்தது. நான் சொல்வதற்க்கு(தாமதமானதற்க்கு) எந்த ஆதாரமும் இல்லையென்றும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்.

என்னிடம் அதற்க்கான ஆதாரம்(ஓவ்வொரு முறை தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் கொடுத்த புகாருக்கென அத்தாட்சி) இல்லை என்பதாலும், இதற்க்குமேல் பிரச்னையை வளர்த்துக்கொண்டு போவதால் உபயோகம் இல்லை என்று பட்டதாலும், வழக்கை முடித்துக்கொளவதாக குறை தீர்ப்பு ஆணையகத்துக்கு கடிதம் எழுதினேன்.

11.02.2008 வக்கீலுக்கு கிரெடிட் கார்டு மறுப்பு - வங்கிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

தகவல் : தினமலர் 11.02.2008

வக்கீல் ஒருவர் ஐசிஐசிஐ வங்கிக்கு கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் செய்யும் வக்கீல் தொழிலைக் காரணம் காட்டி வங்கி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. அவர் டில்லி மாநில நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதற்க்கு அவ்வங்கிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த கோர்ட்.

நம்ம கமெண்ட் : கிரெடி கார்ட் நிராகரிப்புக்குள்ள சரியான காரணத்தை சாதாரணமாக வங்கிகள் சொல்லாது. அக்காரணத்தை அந்த வக்கீல் எப்படி அவ்வங்கியிலிருந்து பெற்றார் என்று தெரியவில்லை. என்னுடன் வேலை பார்ப்பவர் அவ்வாறு காரணம் கேட்டபோது, அவ்வங்கி மறுத்து விட்டதாம். அதற்க்கு ரிசர்வ் வங்கியின் மத்தியஸ்த தீர்ப்பாயத்தை அணுகும்படி அவரிடம் சொல்லியிருக்கேன்.

சாதாரணமா இந்த மாதிரி விஷயங்களுக்கு இவ்வளவு அதிக அபராதம்(ரூ.10 லட்சம்) விதிக்க முடியுமான்னு தெரியவில்லை. வங்கி மேல் முறையீடு செய்தால், அபராதத்தை மிகவும் குறைத்து விடுவார்கள்.

Thursday, February 7, 2008

08.01.2008 பிர்லாசஃப்ட் - 100 பேர் வேலையிழப்பு

டிசிஎஸ்,ஐபிஎம்-க்கு அடுத்து இப்போது பிர்லாசஃப்ட்டோட(Birlasoft) முறை. அவங்க 100 மென்பொருளாளர்களை வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்களாம். "நாங்க ஆட்குறைப்பு ஒண்ணும் செய்யலை. அவங்களோட வேலையில முன்னேற்றமின்மை(performance) காரணாமத்தான் அனுப்புனோம்"னு அவங்க சொல்ராங்க. "அதுவும், இந்த வருடம் மட்டும் முதல் தடவையா அவங்களோட முன்னேற்றமின்மை காரணமா இருந்தால்கூட அவங்கள வீட்டுக்குப் போகச் சொல்லலே. இதுக்கு முன்பும் வேலையில் அவங்களோட முன்னேற்றம் சரியா இல்லாததனாலதான் அவங்கள அனுப்புனோம். இந்த தடவ உள்ள அப்ரைசல்ல(Appraisal) உள்ளவங்களில் 5 சதவீதம் பேர் இப்படி பாதிக்கப்பட்டு இருப்பாங்க"ன்னு, பிர்லாசாஃப்ட் பேச்சாளர் சொன்னார்.

அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குறைவும்,அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் பதிப்புக்கூடுதலும் , இதற்க்குக் காரண்னு வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

கார்ட்னெரோட வல்லுனர் சொல்வது : 2:1 என்றிருந்த வேலைக்கு ஆளெடுப்பு விகிதம் 15:1 என்று கூடுனதும் இதற்க்குக் காரணம். அந்த அளவுக்கு இந்தியாவுல மென்பொருள் வேலைக்கு ஆட்கள் தயாராய் இருக்காங்க.
நம்ம கமெண்ட் : இந்த மாதிரி காரணம் இந்த மாதிரி சிரமமான சமயங்களில் மட்டும் அவங்களுக்குத் தோணுது. அப்போ இவ்ளோ நாளா நல்லா வேலை செய்யாதவனுக்கு சும்மா சம்பளம் கொடுத்திட்டு இருந்திருக்கேன்னு சொல்ராங்களா?

Wednesday, February 6, 2008

07.02.2008 ஆண்கள் உரிமைச் சங்கத்திற்க்கு நிர்வாகிகள் தேர்வு நேர்காணல்

தகவல் தினத்தந்தி 06.02.2008

ஆண்கள் உரிமைச் சங்கத்திற்க்கு நிர்வாகிகள் நேர்காணல்மூலம் தேர்வு 3 நாட்கள் நடக்கிறது.

நம்ம கமெண்ட் : நல்ல முன்னேற்றம்தான்.