இங்கு தமிழரால் புதிதாக ஆரம்பிக்கபட்ட உணவகத்தில் சங்க நிர்வாகியை அழைத்துக்கொண்டு அவர்களால் ஏதாவது ஸ்பான்சர் செய்ய முடியுமா என்று கேட்கப்போனேன். கடை நிர்வாகியை, சங்க நிர்வாகிக்கு அறிமுகப்படுத்தும்போது,அவர் தாந்தான் இந்தக்கடைக்கு முழுபோறுப்பு என்றார்.
அது புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் விளம்பரத்துக்காக அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று நம்பினோம். பொதுக்கூட்டத்துக்கு 100 பேருக்குக் குறையாமல் வருவார்களெனெ எதிர்பார்ப்பதால் அவர்களுக்கு இனிப்பு,காரம்,டீ/காபி வேண்டும் என்றோம். கடை நிர்வாகியும் மிக மகிழ்ச்சியுடன் சரி என்றார். அப்போது இரவு மணி 11. நாங்களும் ரொம்ப சந்தோஷமா வீட்டுக்கு வந்துட்டோம்.
சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் எல்லோரிடமும் இதற்க்கெல்லாம் சந்தாவாக ஆளுக்கு இவ்வளவு என்று பணம் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.பொதுகூட்டத்துக்கு நம்மாட்கள் வர்ரதே பெரிசு. பிறகு எங்கே அவர்களிடம் பணம் கேட்க.
நாங்கள் சொன்ன பொருட்களுக்கு செலவு ரூ.1500க்கு மேல் ஆகாது. அந்த உணவகத்துக்கு அவர்கள் ரூ.15 லட்சத்துக்குமேல் செலவு செய்திருப்பதாக அறிகிரேன். அவ்வுணகத்தில் ஒரு அப்பளம் ரூ.7 என்றால் எவ்வளவு விலை உயர்ந்த உணவகம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
அவர்கள் கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் விருப்பம்.
1.ஆனால், முதல் நாள் இராவு சரி என்று சம்மதிது விட்டு மறு நாள் ஏன் மறுக்க வேண்டும்? அவ்வாறு தன்னால் முடிவு எடுக்க முடியவில்லை எனில்,ஏன் உடனே சரியென சொல்ல வேண்டும்? கடை முதலாளியிடம் தான் கேட்டு சொல்வதாகச் சொல்லியிருக்க வேண்டியதுதானே. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கடை முதலாளியும் அங்கு வந்தார். அவரிடம் கடை நிர்வாகியும் நாங்கள் எதற்க்காக வந்துள்ளோம் என்பதைத் தெரிவித்தார்.
இதைப்பர்க்கும்போது ஒரு படத்தில் கவுண்டமணியின் ஒரு காமெடிதான் ஞாபகம் வருது. கவுண்டமணி பிச்சைக்காரனாய் ஒரு வீட்டில் பிச்சை கேட்பார். வீட்டுக்காரர் தன்னிடம் பிச்சை போடுவதற்க்கு ஒன்றும் இல்லை என்பார். உடனே,அவரிடம் கவுண்ட்ஸ் அப்படி எனில் அவரையும் தன்னுடன் பிச்சைக்கு வரசொல்வார். ஏனெனில்,வீட்டுக்காரரிடமும் ஒன்றும் இல்லை,தன்னிடமும் ஒன்றும் இல்லை என்பார்.
மேற்சொன்ன விடயம் அவ்ளோ பெரிய விடயமா? உங்களுக்கு ஒரு மேலதிக க்ளு. உணவகத்தில், கடை நிர்வாகியும்,கடை முதலாளியும் ரொம்ம ரொம்ப நெருங்கிய சொந்தம். அவங்களுக்குள்ள என்ன உறவுன்னு சரியா யூகிக்கிரவுங்களுக்கு இனிப்பு,காரம் பரிசு. அது உங்க செலவுல பார்சல் அனுப்பபடும்.
6 comments:
சும்மா இருக்கமாட்டிங்களா..
அப்படி நான் சும்மா இருந்திருந்தா, அடுத்த கூட்டத்துக்கு எப்படி செல்வில்லாம இடம் கிடச்சிருக்கும்?
சிவாவாது சும்மா இருக்கறதாவது??!!!??
<==
புதுகைத் தென்றல் said...
சிவாவாது சும்மா இருக்கறதாவது??!!!??
==>
அதானே.
மேடம்,நன்னிங்கோ.
நேத்து தான் கேள்விப்பட்டேன்.. சங்கம் பற்றி... இன்னைக்கு இப்படியா .ஹ்ம்ம்ம்
மங்கை,வரவுக்கு நன்றி.
முடிஞ்சப்போ இங்க(ப்ளாக்) ஒரு எட்டு வந்துட்டுப் போங்க.
Post a Comment