Tuesday, January 22, 2008

21.01.2008 கணவர்களுக்கு தனி இலாகா வேண்டும்:ஆண்கள் சாலை மறியல்

தகவல் : தினமலர்

பெங்களூர் : மகளிர் மேபாட்டுக்கு தனித் துறை இருப்பது போன்று கணவர்களின் நலனுக்காகவும் தனியாக "ஆண்கள் மேம்பாட்டுத்துறை" ஏற்ப்படுத்த வேண்டும் எனக்கோரி கணவர் சங்கம் சார்பில் பென்களூரில் ஆண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.குடும்பத்தில் ஏற்ப்படும் சிறு சம்பவங்களுக்கு,தங்களை கொடுமைப்படுத்தியதாகக் கூறி, பெண்கள் வீதிக்கு வந்தால் அவர்களுக்கு உதவுவது போல,தமக்கும் துணை புரிய அரசு தனித்துறை ஏற்ப்படுத்த வெண்டுமென "சேவ் இண்டியன் ஃபேமிலி அசோசியேசன்" என்ற சங்கம் சார்பில் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் காந்தி சிலை முன் அமர்ந்து சங்கப்பிரதிநிதிகள் தர்ணா நடத்தினர்.
நம்ம கமெண்ட் : பெண்ணீய வாதிகள் இப்பவாவது புரிஞ்சுக்கலாம் பெண்களுக்கு ஏற்க்கனவே உரிமை/சுதந்திரம் வந்திருச்சுன்னு.

6 comments:

மங்களூர் சிவா said...

'நச்'

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க,மஙளூர் சிவா.

pudugaithendral said...

இதெல்லாம் சும்மா? =)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வாங்க புதுகைத் தென்றல்,
எத சும்மான்னு சொல்றீங்கன்னு புரியலயே. பதிவில் சொல்லபட்ட செய்தி தினமலரில் வந்துள்ளது.
"கணவர் சங்கம்" செய்த ஆர்ப்பாட்டம் சும்மான்னு சொல்றீங்களா? அப்போ,அவர்கள் வேலையில்லாமல்/பொழுது போகாமல் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்று சொல்றீங்களா? சென்னையில்கூட இதே மாதிரி சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்தித்தாளில் படித்தேன்.அதில்,பெண்களும் ஆலோசகர்களாக்ச் சேர்ந்துள்ளார்கள், பாதிக்கபடும் கணவர்களுக்கு உதவ.

pudugaithendral said...

இப்படி ஆண்கள் சங்கம் துவங்கி சீன் கிரியேட் செய்வதால் பெண்கள் எல்லாம் ஆண்களை துயரப் படுத்துவதாக காட்டிக்கொள்ளத்தான்.

உண்மையில் ஆண்களால் பெண்கள் படும் துயரம் தீராத சோகக் கதை.

அப்படியே 1 அல்லது 2 பெண்கள் செய்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், ஆண்கள் படுத்திய பாட்டிற்கு முன்னால் இதெல்லாம் ஜுஜூபி.

ஆணீயமும் வேண்டாம் பெண்ணீயமும் வேண்டாம், கருத்தொருமித்த தம்பதிகளாக, நண்பர்களாக வாழலாமே????????

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

புதுகைத்தென்றல்,
நீங்க(விதண்டா) வாதம் செய்வது எப்படின்னு ப்ளாக்ல படிச்சுருக்கீங்கன்னு புரியுது .
<===
அப்படியே 1 அல்லது 2 பெண்கள் செய்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், ஆண்கள் படுத்திய பாட்டிற்கு முன்னால் இதெல்லாம் ஜுஜூபி.

ஆணீயமும் வேண்டாம் பெண்ணீயமும் வேண்டாம், கருத்தொருமித்த தம்பதிகளாக, நண்பர்களாக வாழலாமே????????
==>
பாருங்க முதல் வாக்கியத்தையும்(ஆண்கள் படுத்தும்பாடு),2வது வாக்கியத்தையும்(நண்பர்களாக இருப்போமே) =)))
பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவதால் வெளி உலகுக்கு எளிதாகத் தெரியும்.
ஆண்களால் அப்படிச்செய்ய முடியாதல்லவா?
அதனால் 1,2 பெண்கள் என்று சொல்ல முடியாது.