நாம என்ன பொருள்/சேவையை வாங்கினாலும் அதிலுள்ள குறையச் சம்மத்தப்பட்டவர்களிடம் சொல்லி நிவர்த்தி செய்ய முடிவதில்லை. அரசு சேவை மட்டுமல்ல தனியார் சேவையும் அதே லட்சணத்தில்தான் இருக்கு.
"என்னத்த சொல்லி என்ன பண்ண? நாம சொல்லி நடக்கவா போகுது?"ன்னு நம்ம எல்லோருக்கும் ஒரே அங்கலாய்ப்புதான். சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தால் புகாரே வரவில்லை" என்று வழக்கமான பதில் கிடைக்கும். என்னமோ புகார் வந்தால் அதை தீர்த்துவிட்டுத்தான் மறுவேலைபார்ப்பது மாதிரி.
சமீபத்தில் படித்த செய்தி. வங்கி சம்பந்தமான 'வங்கி மத்தியஸ்த தீர்ப்பாயத்துக்கு' வந்த புகார்களில் ஆயிரம் உபயோகிப்பாளர்க்கு 0.01க்கும் குறைவாம். அதாவது, லட்சத்தில் ஒருவர்தான் புகாரே பண்ராராம். ஒரே ஒரு மேல்நாட்டு வங்கியில் மட்டும் 1000க்கு 25 பேராம். ஏனெனில்,புகார் செய்தவர்கள் அதிக அளவில் பணப்பரிவர்த்தனை செய்யும் HNI(High Networth Individuals)க்கள்.
சமீபத்தில் ரயிலில் வந்தபோது உடன் வந்தவர் ஒன்று சொன்னார். அவர் ரயில் ஒரு நிலையத்தில் நின்றபோது, கட்டணக் கழிப்பிடத்திற்க்குச் சென்றிருக்கிரார். அங்கிருப்பவர் கட்டணமாக ரூ.2 கேட்டிருக்கிறார். உடனே நம்மாள் திரும்பி வந்துட்டார். இதே மாதிரி, எனக்கு பெங்களூரில் நடந்தபோது அங்குள்ள புகார் புத்தகத்தில் புகாராக இதை எழுதிவிட்டு வந்தேன். ரயில்வேயிலிருந்து புகார் கிடைக்க்ப்பெற்ற அத்தாட்சிக் கடிதம் எனக்குச் சில தினங்களில் கிடைத்தது. அதற்க்கப்புரம், அதே மாதிரி ரயிலில் போகும் சந்தர்ப்பமோ, அங்கு கழிப்பிடத்தை உபயோகப்படுத்தும் வாய்போ அமையவில்லை.
பல வருடங்களுக்கு முன் (தமிழ்நாட்டு) ஒரு கோவிலில் செருப்பை அதற்க்கான பாதுகாப்பகத்தில் விட்டேன். அங்கிருப்பவர் அதற்க்குக் கட்டணமாக 50 பைசா கேட்டார். அப்போதெல்லாம் அதற்க்கு 25 பைசா தான். நான் தயங்கியவாரே 50 பைசாவை அவரிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். அப்போது கண்ணில் பட்டது அந்த அறிவிப்புப் பலகை "செருப்புக்குக் கட்டணம் 25 பைசா". உடனே, செருப்புக்காப்பாளரிடம் அதைக்காட்டி "ஏன் அதிகம் வாங்குகிறீர்கள்" என்று கேட்டேன். அவர் "நிரம்பப் பணம் போட்டு குத்தகை எடுத்துள்ளோம். அதனால் 50 பைசாதான் " என்றார். இருந்தாலும் மனசு கேக்கலை. அங்குள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில் இது சம்பந்தமாக விசாரிக்கச் சென்றேன். இதற்க்காவே காத்திருந்தவர்போல, அங்குள்ள அதிகாரி "ஆமாம் சார் 25 பைசாதான். ஆனால், குத்தகைதாரர் அதிகமாத்தான் வசூலிக்கிறார். அதனாலதான் நாங்களே(அறநிலையத் துறை) அதை எடுத்து நடத்தலாம்னு இருக்கோம். அதுக்கு குறைந்தது 20 (எழுத்துப்பூர்வமான) புகார்கள் தேவை. அந்தப் புகார்களை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, நாங்களே அதை நடத்துவதற்க்கு அனுமதி பெறணும். இதுவரை 10 புகார்கள் வந்துள்ளன. நீங்களும் எழுத்துப்பூர்வமாகப் புகார் கொடுத்தால் பெற்றுக்கொள்வோம்" என்றார். பின் அவ்வாறே செய்தேன். நான் அவ்வூரிலோ, அருகிலோ குடியிருந்து இருந்தால், மீதி 10 புகார் கடிதங்களையும் மற்றவர்களிடமிருந்து நானே பெற்றிருப்பேன்!
டோண்டு அவர்கள் தன் பதிவில் தான் மும்பையிலிருக்கும்போது தவறாகக் காட்டிய போக்குவரத்து சிக்னலை, புகாராகத் தெரிவித்ததாகவும், மறுநாளே அது சரி செய்யப்பட்டதாகவும் சொல்லியிருந்தார்.
சரி சரி,முன்னுரை போதும்,விஷயத்துக்கு வா என்கிறீர்களா. இதோ வந்துட்டேன்.
இதுவரை 5 விடயங்களில் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம், ரிசர்வ் வங்கியின் மத்தியஸ்த தீர்ப்பாயம் போன்றவற்றில் புகார் செய்து, இறையருளால், அக்குறைகள் நிவர்த்தியாகியுள்ளன. ஒரு முறை கடைக்காரரிடம் சுமார் 15 நிமிடம் நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் பற்றி பேசியே, குறைகள் நிவர்த்தியாயுள்ளன. அதில் ஒவ்வொன்றாகப் பார்போம்.
13 comments:
நல்ல பதிவு.
நல்ல டாபிக் எடுத்துக்கிட்டு இருக்கீங்க
புகார் கொடுக்கறது எங்க?எப்படி? இதெல்லாம் தெரியாததும் ஒரு காரணம்ங்க.
ஆமாம், என்னோட சமீபத்திய இந்திய விஜயம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், கரப்பான்பூச்சிகளைக் தரிசிக்க முடிந்த்து.
இதை நான் புகார் கொடுக்க நினைத்த நேரத்தில் நண்பர் சொன்னார், "அடப்போங்கங்க, மத்தியகிழக்கு நாட்டுக்கு போகும் விமானத்தில் எலியும் போகுதாம்னு"!!!
என்ன செய்யட்டும்?
வாங்க மங்களூர் சிவா
வாங்க புதுகைத்தென்றல்,
ஆமாங்க,கஷ்டம்தான்.
புகார் பண்றது நமக்கு மட்டுமில்லீங்க.எல்லோருக்கும் சேர்த்துதான்.குறந்தபட்சம் நமக்கு சட்டப்பூர்வமா எதிர்த்து போராடுதற்க்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும்.
ஒரு தடவை,ரெண்டு தடவை புகார் பண்ணி புகார நிவர்த்திப் பண்ணிப்பாருங்க.அப்புரம் தெரியும் உங்க தன்னம்பிக்கையை.
புகார் பண்ண உடனேயே, அது நிவர்த்தியாயிட்டா அப்புரம் இப்படி பதிவு எழுத வேண்டியதே இல்லயே!
தகவல் அறியும் சட்டம்லாம் எதுக்கு கொண்டு வந்திருக்காங்கன்னு நினைக்கிரீங்க? அரசாங்கம் ஒழுங்க வேலை செய்யணும்னுதான்.
புகரா நிவர்த்தி பண்ணனும்னு ஒரு அதீத ஆர்வத்தோட, இல்ல இல்ல, ஒரு வெறியோட முயன்றால்தான் நடக்கும்.
ஒன்னா ரெண்டா? புகார் கொடுக்க?
சரி ஆனாலும் கஜினி முகம்மது மாதிரி படையெடுக்கச் சொல்றீங்க
பார்க்கலாம்.
ஒவ்வொரு துறைக்கும் எங்கெங்கே
புகார் செய்யணூம் எல்லாம் விவரமா கொடுங்க. மத்தவங்களுக்கும் உதவியாய் இருக்கும்.
அதென்னமோ உண்மைதான்..நம்மில் எத்தனை பேருக்குப் புகார் கொடுக்கும் பொறுமை இருக்கிறது..சும்மா புலம்பி விட்டுப் போகிறவர்கள்தான் அனேகர்..(என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்..)
வாங்க பாச மலர் தாயி,
உங்களால முடிஞ்சா 2 தடவ புகார் கொடுத்து சாதிச்சு பாருங்க. அப்புரம் தெரியும் உங்களோட பலம் என்னன்னு.
என் செல்பேசிய பழுது நீக்கிரதுக்கு கடைக்காரன்கிட்ட கொடுத்தேன். முதல்ல ரூ.100, அப்புரம் ஒரு ரூ.100, அப்புரம் ஒரு ரூ.400ன்னு ஒவ்வொரு தடவையும் கேட்டான். கொடுத்தேன். 2 மாசம் கழித்தும் பழுது அப்படியே இருந்தது. ஒரு 15 நிமிடம் இந்த மாதிரி புகாரப்பத்தி பேசினேன். ரூ.500 திருப்பிக்கொடுத்துட்டான்.
ரூ.500 என்றாலும் இதே முறைதான்.ரூ.50,000 என்றாலும் இதே முறைதான்.
அட... இப்படி ஒரு தொடர்போய்கிட்டு இருக்கா...!!
பயனுள்ள பதிவு, சிவா! முதல்ல நம்ம உரிமைகளை தெரிஞ்சிக்குவோம்..
/ அங்கிருப்பவர் அதற்க்குக் கட்டணமாக 50 பைசா கேட்டார். அப்போதெல்லாம் அதற்க்கு 25 பைசா தான். /
சிவா.. இதைப் படிக்கும்பொழுது ...
பெரிய பெரிய திமிகலங்கத்தைலாம் கேள்வி கேக்காம.... இப்படி சின்ன சின்ன மீன்களை படுத்தி எடுக்கிறது நியாயமா படமாட்டேங்குது...!! ;(
அப்போ நான் நிஜமாவே சின்னப் பையன்[மங்களூர் சிவா மாதிரி பெரிய ஆளாயிட்டு சின்னைப்பையன் சொல்றாருல்ல .அது மாதிரி இல்ல]
அது என்ன ப்ளாக்குன்னு நினைச்சீங்களா? சும்மா கேள்வி கேட்டா, வீட்டுக்கு ஆட்டோவுல வரும்? =)))
மேலே சொன்ன பின்னூட்டப் பதில் எல்லாம் படிங்க. ரூ.500,ரூ.50K க்கும் ஒரே முறை(procedure)தான் பின்பற்றணும்.
இனி அடுத்துவரும் பதிவுல பாருங்க.
நல்ல பதிவுங்க!
புலம்புறத விட்டுட்டு...புகார் குடுக்கறதுத்தான் தீர்வு தரும் இல்லையா?
நல்லா சொல்லியிருக்கீங்க!!
இப்பகூட புகார் எழுதிட்டுத்தான் வந்திருக்கேன்! (திருச்சி கடை ஒன்றில்)
Neengadhan sariya purinchukkalai oru seruppukku 25paise neenga 2 seruppaiyum pottuttu 25 paisa koduththa eppadi
(Idhu eppadi irukku)
வாங்க சுரேகா,
புகார் எழுதுங்க, நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்திற்க்கு போவேன்னு. ஓரளாவது பதில் கிடைக்கும்.
<==
T.V.Radhakrishnan said...
Neengadhan sariya purinchukkalai oru seruppukku 25paise neenga 2 seruppaiyum pottuttu 25 paisa koduththa eppadi
(Idhu eppadi irukku)
==>
ஹா ஹா ஹா, நல்லா இருக்கு.
எழுதறப்பவே யோசிச்சேன்.இப்படியெல்லாம் ஒரு கிண்டல் பின்னூட்டம் வரும்னு. இருந்தாலும் இப்பத்தானே அறிவிப்பு அட்டையில போடுவாங்கன்னு அப்படியே போட்டுட்டேன்.
Post a Comment